பெங்களூரு, பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேசியதாவது:- நாடாளுமன்ற தொகுதி மறுவரையை செய்தால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும். அதனால் நாங்கள் இதை எதிர்க்கிறோம். தென்மாநிலங்களின் குரல் பாதிக்கப்படும். தமிழ்நாட்டின் நலன், பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக மேகதாதுவில் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளோம். மேகதாதுவில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரில் 95 சதவீதம் தமிழகத்துக்குதான் பயன்படும். மேகதாது அணையால் தமிழகத்திற்கே நன்மை என முதல்-அமைச்சர் விஜய்யிடம் தெளிவுபடுத்திவிட்டோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் வழங்கப்படும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நாங்கள் மதிப்போம். 10 ஆயிரம் பாரத் ஜோடோ குழுக்களை அமைத்து இளைஞர் களை விளையாட்டு, கலாசாரம், சமூக பணிகளில் ஈடுபடுத்த திட்டமிட்டு இருக்கிறோம். எஸ்.ஐ.ஆர். பணிகளில் தகுதியான வாக்காளர்களின் பெயர் விடுபடாமல் இருக்க நாங்கள் குடியிருப்பு சான்றிதழ் வழங்குகிறோம். 2028-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். அடுத்து நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/mekedatu-dam-is-in-tamil-nadus-own-interest-dk-shivakumar




