மும்பை, தலைநகர் டெல்லியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு மங்கள லட்சத்தீவு எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்கி வருகிறது. ரூ. 26 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல் இந்த ரெயில் கடந்த 17ம் தேதி டெல்லியில் இருந்து மராட்டிய மாநிலம் நவி மும்பை ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது அந்த ரெயிலின் ஏசி வகுப்பு பெட்டியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திருந்த நபரை பிடித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபரிடம் இருந்து 26 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த தங்கம், வெள்ளி நகைகள் ரெயில் பயணியிடமிருந்து திருடப்பட்டவை என்பது தெரியவந்தது. இதையடுத்து ஏசி பெட்டியில் திருட்டில் ஈடுபட்ட ரகு சுமன் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரெயில்களில் ஏசி வகுப்பு பெட்டிகளில் பயணிக்கும் பணிகளை குறிவைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், ரகு சுமன் மீது திருட்டு உள்பட 39 வழக்குகள் நிலுவையில் உள்ளதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/history-sheeter-held-for-thefts-in-ac-coaches-of-trains-gold-silver-worth-rs-26-lakh-seized




