ராமநாதபுரம், ஏர்வாடி அருகே இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இரட்டை கொலை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை அடுத்த கீழக்கரை காட்டுப்பகுதியில் உள்ள புதருக்குள் 2 பேரின் சடலங்கள் கிடந்துள்ளன. அவற்றை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த ஏர்வாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 2 சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் கோபி என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு மேலும், இந்த கொலையை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/terror-near-airwadi-2-people-hacked-to-death-police-launch-a-net-to-track-down-the-suspects




