சென்னை, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”நம் அனைவரின் வாழ்க்கைப் பாதையில் அறிவொளி ஏற்றி, கனவுகளை நோக்கிப் பயணிக்க வழிகாட்டும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் கல்வியின் முக்கியத்துவத்தையும் போற்றும் சிறப்புமிக்க நாளாக இது திகழ்கிறது. பாடங்களை மட்டுமல்ல, வாழ்க்கையையும் கற்றுத் தந்து, அறிவை விதைத்து, நம்பிக்கையை வளர்த்து, தலைமுறைகளை உருவாக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/happy-teachers-day-to-all-teachers-nainar-nagendran



