தென்காசி, திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி கோட்டம், கீழப்பாவூர், அச்சன்புதூர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் நாளை மறுநாள் (21.7.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீ வனஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கீழப்பாவூர் மற்றும் அச்சன்புதூர் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (21.7.2026, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அதன்படி பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூர். வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவா நகரம், காசி தர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-tenkasi-the-day-after-tomorrow-10




