புதுடெல்லி, அயோத்தி ராமர் கோயில் நிதி மோசடி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. அப்போது நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி, இந்த வழக்கின் தற்போதைய விசாரணை நிலை குறித்த அறிக்கையை மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. தொடர்ந்து உத்தர பிரதேச அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் உண்மையை கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், உத்தர பிரதேச காவல்துறை நடத்திய விசாரணையில், முதல் கட்டமாக குற்றம் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விசாரணையின்போது தலைமை நீதிபதி சூரியகாந்த், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும், நீதிமன்றங்கள் அரசியல் செய்வதற்கான இடம் இல்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், இது ஒரு சாதாரண குற்ற வழக்கு மட்டுமே என்று தெரிவித்த அவர், முறையான விசாரணை நடப்பதை உறுதி செய்வதே எங்கள் வேலை என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை 27-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/do-not-politicize-the-issue-of-irregularities-in-ram-temple-donations-supreme-court




