முதலீடு என்று வரும்போது எல்லோரும் பார்க்கும் முக்கியமான விஷயம் எவ்வளவு லாபம் கிடைத்திருக்கிறது. இந்த லாபம் எவ்வளவு கிடைத்திருக்கிறது என்பதை எப்போதும் மொத்தக் கணக்கில் பார்க்கக்கூடாது. உதாரணமாக, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். இன்றைக்கு அது மூன்று லட்சம் ரூபாய் ஆகிவிட்டது என்று சொன்னால் நமக்கும் பெருமையாகத்தான் இருக்கும். நம்மையும் மற்றவர்கள் பெருமையாகத்தான் பார்ப்பார்கள். ஆனால், இப்படி நாம் கணக்கு பார்க்கவே கூடாது. ஒருவர் செய்த முதலீட்டுக்கு எத்தனை சதவிகிதம் லாபம் கிடைத்திருக்கிறது, அந்த லாப வளர்ச்சி ஆண்டு தோறும் எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்பதைக் கணக்கிட்டுப் பார்ப்பதுதான் சரியாகக் கணக்கிட்டுப் பார்ப்பதாகும்! இப்படிக் கணக்கிட்டுப் பார்ப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பதுதான் சி.ஏ.ஜி.அர் CAGR - Compounding Annual Growth Rate முறை ஆகும்! calculator CAGR முறையில் கணக்கிட்டுப் பார்த்தால், உங்கள் முதலீடு ஆண்டு ஆண்டுதோறும் எந்த அளவுக்கு லாபம் கிடைத்திருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட முடியும். இந்த அடிப்படையில் கணக்கிட்டு ஆண்டுதோறுமான லாப வளர்ச்சி விகிதத்தைக் கணக்கிட்டால், முதலீட்டுக்கு எந்த அளவுக்கு லாபம் கிடைக்கிறது என்பதை நாம் சரியாக அளந்து பார்க்க முடியும் என்பதுடன், பல்வேறு முதலீடுகளுடன் கிடைக்கக்கூடிய லாப விகிதத்தை ஒப்பிட்டுப் பார்க்கவும் முடியும்! சில உதாரணங்களைப் பார்ப்போம். முதலில் தங்கத்தை எடுத்துக்கொள்வோம். தங்கம் விலை ஒரு கிராம் கடந்த 2005-ஆம் ஆண்டில் ரூ.700-ஆக இருந்தது. இப்போது அது ரூ.13,500-ஆக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரு கிராம் தங்கம் கடந்த 20 ஆண்டுகளில் தந்த லாபம் 15.98% ஆகும். இந்த லாபம் என்பது ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கவில்லை. சில ஆண்டுகள் விலை உயராவிட்டாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் விலை அதிகம் உயர்ந்ததால்தான், 20 ஆண்டுகளில் 15.98% லாபம் கிடைத்திருக்கிறது. தங்கம் மூலம் கிடைத்த லாபம் 12 மடங்கு என்று பார்க்காமல், ஆண்டுதோறும் 15.98% லாபம் கிடைத்திருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும். தங்கம் | Gold Investment அடுத்து, ரியல் எஸ்டேட் மூலம் கிடைக்கும் லாபத்தைப் பார்ப்போம். ரியல் எஸ்டேட் முதலீடு என்பது எல்லோரும் ஒரே அளவில் லாபம் கிடைக்காது. ஒவ்வொரு இடத்திலும் டிமாண்ட், சப்ளைக்கேற்ப விலை மாறுபடும் என்பதை நாம் மறக்கக்கூடாது. அந்த வகையில், 2005-ஆம் ஆண்டில் ஒருவர் 20 லட்சம் ரூபாயை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருக்கிறார். இன்றைக்கு அது ஒரு கோடி ரூபாய் ஆகிவிட்டது எனில், கடந்த 20 ஆண்டுகளில் இந்த ரியல் எஸ்டேட் மூலம் கிடைத்த லாபம் 8.38% ஆகும். 20 லட்சம் ரூபாய் ஒரு கோடி ரூபாயாக ஆகிவிட்டது என்று பார்க்காமல், 8.38% அளவுக்கு லாபம் கிடைத்திருக்கிறது என்று பார்க்க வேண்டும். இனி பங்குச் சந்தையை எடுத்துக்கொள்வோம். ஒரு முதலீட்டாளர் 2005-ம் ஆண்டில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தார். இப்போது அது ரூ.20 லட்சம் ஆகிவிட்டது எனில், 10 மடங்கு லாபம் அடைந்திருப்பதாக நினைக்காமல், ஆண்டுதோறும் 12.20% லாபம் கண்டிருக்கிறோம் என்று புரிந்துகொள்ள வேண்டும். கடைசியாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எடுத்துக்கொள்வோம். 2005-ஆம் ஆண்டில் ரூ.2 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறார். இப்போது அது 25 லட்சம் ரூபாயாக அதிகரித்துவிட்டது எனில், அவருக்கு ஆண்டுதோறும் 13.46% லாபம் கிடைத்திருக்கிறது. இப்படி சி.ஏ.ஜி.ஆர் கால்குலேட்டர் மூலம் முதலீட்டுக்கான வருமானத்தைக் கணக்கிடும்போது, ஆண்டுதோறும் கிடைத்த லாபத்தின் அளவை பர்சன்டேஜ் கணக்கில் மிகத் துல்லியமாக அளக்க முடிவதுடன், வேறொரு முதலீட்டுடன் பொருத்திப் பார்த்து, எதில் அதிகமான லாபம் கிடைத்திருக்கிறது என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்! முதலீடுPersonal Finance: இன்றைய சந்தோஷத்தையும் நாளைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தணும்! என்ன செய்யணும்? இந்த சி.ஏ.ஜி.ஆர் கால்குலேட்டரைப் பயன்படுத்துவது மிக எளிது. கூகுள் ஸ்டோரில் CAGR Calculator என டைப் செய்தால், பல சி.ஏ.ஜி.ஆர் கால்குலேட்டர்கள் வரும். இதில் ஒன்றைத் தேர்வு செய்து ஆரம்பத்தில் நீங்கள் செய்த முதலீடு, இப்போது அந்த முதலீட்டின் மதிப்பு, எத்தனை ஆண்டுகளில் இந்த லாபம் கிடைத்திருக்கிறது என்கிற விவரங்களைத் தந்தால், ஆண்டுதோறும் உங்களுக்குக் கிடைக்கும் லாப விகிதம் தெளிவாகத் தெரிந்துவிடும். எந்தவொரு முதலீடாக இருந்தாலும் சரி, கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளில் ஆண்டுதோறும் வெறும் 6% லாபம் மட்டுமே கிடைத்துள்ளது எனில், அது நல்ல முதலீடே அல்ல. 8% மேலும் சுமார் 12% வரையில் ஒரு முதலீட்டின் மூலம் ஆண்டுதோறும் லாபம் கிடைத்திருந்தால் அதை நல்ல முதலீடு எனலாம்! நீங்கள் செய்துள்ள முதலீட்டுக்கு ஆண்டுதோறும் எவ்வளவு லாபம் கிடைத்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள உடனே CAGR Calculator-யை டவுன்லோட் செய்யுங்கள்! மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யணுமா? வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள். வெளிநாட்டில் வசிப்போருக்கு: இந்தியாவில் வசிப்போருக்கு: Labham Youtube Channel: Labham Website: முதலீட்டாளர்களின் கவனத்துக்கு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்! Personal Finance: இந்த மாதிரி பட்ஜெட் போட்டா, 10 வருஷத்துல ₹23 லட்சம் சேர்க்கலாம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/personal-finance/cagr-calculator-to-help-you-accurately-calculate-your-profits




