தூத்துக்குடி, 'இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் விஜய்' என்று தூத்துக்குடியில் ஒட்டப்பட்டுள்ள த.வெ.க. போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த பிரதமர் விஜய் த.வெ.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பின்னர் பல்வேறு கட்சிகளில் இருந்தும் முக்கிய பிரபலங்கள் மற்றும் பலர் த.வெ.க.வில் இணைந்து வருகிறார்கள். இதற்கிடையே த.வெ.க.வினர் சமீபகாலமாக அடுத்த பிரதமர் விஜய் என்று கூறி வருகின்றனர். காங்கிரசார் விமர்சனம் இது த.வெ.க.வுடன் கூட்டணியில் உள்ள காங்கிரசாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் த.வெ.க.வினர் ரசிகர் மன்ற மனநிலையில் இருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும் ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று உறுதியாக கூறி உள்ளார். த.வெ.க. போஸ்டரால் பரபரப்பு இந்த நிலையில் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் முதல்-அமைச்சர் விஜய்யை வாழ்த்தி, அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த சுதாகர் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அந்த போஸ்டரில், 'இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் விஜய்' என்றும், தூத்துக்குடி மத்திய மாவட்ட த.வெ.க. என்றும் எழுதப்பட்டு உள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/todays-chief-minister-tomorrows-prime-minister-vijay-tv-poster-creates-stir-in-thoothukudi




