ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பாபுலால். இவர் சென்னை பெருங்குடி பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி சென்னிதேவி (43). இந்தத் தம்பதியினருக்கு ராகேஷ் (18) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராகேஷ், பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்தார். அதனால் அவரின் பெற்றோர் ராகேஷைத் திட்டியதாகத் தெரிகிறது. அதன் காரணமாக ராஜேஷ், மனஉளைச்சலில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்காக அவர் தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்த நிலையில் பாபுலால், சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த மாநிலத்துக்குச் சென்றுவிட்டார். அதனால் சென்னையில் சென்னிதேவி, தன்னுடைய மகன், மகளும் தங்கியிருந்தார். சம்பவத்தன்று சென்னிதேவி, தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தியும் உலக்கையால் அடித்தும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அம்மாவைக் கொலை செய்துட்டாங்க என ராகேஷ் அலறி துடித்தார். அந்தச் சத்தம் கேட்டு அவரின் தங்கை படுக்கையறைக்குச் சென்று பார்த்தபோது சென்னிதேவி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். கைது பின்னர் இந்தச் சம்பவம் குறித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸர், சென்னிதேவியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை எப்படி நடந்தது என ராகேஷ் மற்றும் அவரின் தங்கையிடம் விசாரித்தனர். மேலும் சி.சி.டி.வி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை நேரத்தில் ராகேஷ், பதற்றத்துடன் வீட்டிலிருந்து ஓடி வந்து சத்தம் போடும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும் வீட்டுக்குள் யாரும் செல்லவில்லை என்பதும் சி.சி.டி.வி மூலம் தெரியவந்தது. அதனால் போலீஸாரின் சந்தேகப் பார்வை ராகேஷ் மீது விழுந்தது. அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது மனஉளைச்சலிலிருந்த ராகேஷ், அம்மாவைக் கொடூரமாகக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். சம்பவ இடத்திலிருந்து கத்தி, உலக்கை ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். சென்னை: ரௌடி அஜய் ஓட ஓட நடுரோட்டில் விரட்டி கொலை; தப்பிய கும்பலுக்கு போலீஸ் வலை; என்ன நடந்தது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/chennai-son-brutally-kills-mother-and-stages-a-charade



