அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வசித்து வந்த இயக்குநர் மார்க் ரைடெல், வயது மூப்பு காரணமாக காலமானார். பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்க் ரைடெல் காலமானார். அவருக்கு வயது 97. ஹாலிவுட்டில் வெளியான, த போக்ஸ், த ரீவர்ஸ், த கவுபாய்ஸ், சிண்ட்ரெல்லா லிபர்ட்டி, ஆன் கோல்டன் பாண்ட், இன்டர்செக்சன் உள்பட பல படங்களை இயக்கியவர் மார்க் ரைடெல். பல சின்னத்திரை தொடர்களையும் இயக்கியுள்ளார். ஹாலிவுட் என்டிங் உள்பட சில படங்களில் நடித்தும் இருக்கிறார். குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட இவருடைய ‘ஆன் கோல்டன் பாண்ட்’ திரைப்படம் 10 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதில் ஹென்றி போண்டாவுக்கு சிறந்த நடிகர், கேதரின் ஹெப்பர்னுக்கு சிறந்த நடிகை உள்ளிட்ட 3 விருதுகள் கிடைத்தன. மார்க் ரைடெலும் சிறந்த இயக்குநருக்கான விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள உட்லண்ட் ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்த மார்க் ரைடெல், வயது மூப்பு காரணமாக காலமானார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/hollywood-director-mark-rydell-has-died




