சோனி விழா சேனல், நடிகை சமந்தா தொகுப்பாளராக பங்கேற்கும் மாஸ்டர் செப் சமையல் நிகழ்ச்சிக்கான டீசரை வெளியிட்டுள்ளது. சோனி நிறுவனத்தின் புதிய சேனல் - சோனி விழா தமிழ் தொலைக்காட்சியில் சோனி நிறுவனம் தன்னுடைய சோனி விழா என்ற புதிய சேனலை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. திரையுலகில் முன்னணி கதாநாயகிகள் மற்றும் முன்னாள் கதாநாயகிகள் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் சமந்தாவும் சின்னத்திரையில் ஒளிபரப்பாக இருக்கும் சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார். சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சமந்தா இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரபல ஓடிடிதளமான சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா நிறுவனத்தின் சோனி விழா வெளியிட்டுள்ளது. ஆயுத பூஜை அன்று சமந்தா தொகுப்பாளராக பங்கேற்கும் மாஸ்டர் செப் சமையல் நிகழ்ச்சி வெளியாக உள்ளது. இதுகுறித்து சமந்தா “நான் இதுவரை இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதில்லை. அதனால்தான் சம்மதித்தேன். நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தவறுகள் செய்வதையும் ஒருவரை ஒருவர் ஆச்சரியப்படுத்துவதையும் பார்ப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.மேலும் பிரபலங்களின் மற்றொரு பக்கத்தை இந்நிகழ்ச்சியில் காணலாம்” என்றார். The ultimate culinary face-off begins here, with leading the way. Celebrity MasterChef Tamil - Coming soon on Sony விழா and Sony LIV. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actress-samantha-is-stepping-onto-television-small-screen-as-the-host




