திருவனந்தபுரம், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நூதன முறையில் MDMA எனப்படும் உயர்ரக போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் வாங்க வரும் நபர்களிடம் பணத்தை வங்கி கணக்கில் பெற்றுவிட்டு, செல்போனில் இருப்பிடத்தை(Location) அனுப்பி போதைப்பொருளை சப்ளை செய்யும் கும்பல் குறித்து போலீசார் கண்டறிந்தனர். இந்த கும்பலில் தொடர்புடைய நபர்களைப் பிடித்து விசாரணை நடத்திய போலீசார், இதில் முக்கிய நபராக செயல்பட்ட பேராம்பிரா பகுதியைச் சேர்ந்த காவியா என்ற இளம்பெண்ணை அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்த கும்பலை சேர்ந்த மற்ற நபர்களை தீவிரமாக தேடி வரும் போலீசார், அவர்களின் வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/high-end-drugs-sold-using-a-novel-method-in-kerala-young-woman-arrested




