திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரம் ஊராட்சியில், 125 நாள் வேலை திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரை அடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் சென்று அதிரடி விசாரணை நடத்தியுள்ளார். புகார் மனு வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர், ஸ்ரீராமபுரம் ஊராட்சியில் மத்திய,மாநில அரசுகளின் 125 நாள் வேலை திட்டம் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்) செயல்படுத்தப்படுவதில் முறைகேடுகள் நடப்பதாக வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், ஸ்ரீராமபுரம் ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தின் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வரும் அம்பிகா என்பவர், தொழிலாளர்களின் பணிப்பதிவேடு மற்றும் திட்டப்பணிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார். அதிரடி நடவடிக்கை அதிகாரி நேரில் விசாரணைபொதுமக்களிடம் இருந்து வந்த இந்த பரபரப்பு புகாரை அடுத்து, வேடசந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். அவர் நேற்று பூத்தாம்பட்டியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேரடியாக சென்றார்.அங்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள், வேலைக்கு வந்தவர்களின் விவரங்கள் மற்றும் பணிப்பதிவேடுகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டார். சுரேஷ் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தார். விசாரணை முடிந்ததை அடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் சென்ற அடுத்த சில நிமிடங்களிலேயே ஊராட்சி அலுவலக வளாகத்தில் திடீர் மோதல் வெடித்தது. நீங்கள் எப்படி கூறலாம்? அங்கு வந்த வார்டு உறுப்பினர் மகேஸ்வரியின் மகள் புவனேஸ்வரி, பணித்தள பொறுப்பாளர் அம்பிகாவை நோக்கிச் சென்று பாய்ந்தார். என் தாயார் (வார்டு உறுப்பினர் மகேஸ்வரி) இந்த திட்டத்தில் கமிஷன் வாங்கியதாக நீங்கள் எப்படி கூறலாம்?" என்று கேட்டு அம்பிகாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது. கமிஷன் புவனேஸ்வரியின் கேள்விக்கு பணித்தள பொறுப்பாளர் அம்பிகா ஆவேசமாக பதிலடி கொடுத்தார். அப்போது அவர், முறைகேடாக வந்த பணத்தை நான் மட்டும் தனியாக வைத்து கொள்ளவில்லை. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் என அனைவருக்கும் சமமாக பிரித்து கொடுத்துவிட்டேன்" என்று அங்கிருந்தவர்கள் முன்னிலையில் பகிரங்கமாக கூறினார். அதிகாரி விசாரணை நடத்தி சென்ற உடனே, மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் கமிஷன் பிரித்து கொடுக்கப்பட்ட விவகாரத்தை அவரே ஒப்புக்கொண்டது வேடசந்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மண்ணை வாரி மோதல் இதனால், வார்டு உறுப்பினர் மகேஸ்வரியின் மகள் புவனேஸ்வரிக்கும், அம்பிகாவுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு எல்லை மீறி முற்றியது. ஆத்திரமடைந்த இருவரும் ஊராட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறி, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பார்க்கும் படி முக்கிய சாலைக்கு வந்தனர். அங்கு மாறி, மாறி மண்ணை வாரி தூற்றி மோதல்அங்கு நடுத்தெருவில் நின்றுகொண்டு, சினிமா பாணியில் ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி தூற்றி சாபமிட்டபடி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் விசாரணை சண்டை உச்சக்கட்டத்தை எட்டியதில், ஆத்திரமடைந்த இரு பெண்களும் ஒருவரையொருவர் தலைமுடியை பிடித்துக் கொண்டு சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இதில் காயம் அடைந்த புவனேஸ்வரி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/allegation-of-irregularities-in-the-125-day-employment-scheme-women-engaged-in-a-scuffle-hurling-soil-at-each-other




