தென்காசி, தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் கருவந்தா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசேகரன் மகன் செல்வதாஸ் (31 வயது). இவர் காற்றாலையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் இவரது செல்போனுக்கு செயலி மூலம் குறுந்தகவல் வந்தது. அதில், ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை செய்து சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. பின்னர் அதில் வந்த இணையதள லிங்கில் பதிவு செய்து 'காயின் பிட்டிங் டாஸ்க்' ஆன்லைன் வேலையை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். முதல் நாள் முதலீடின்றி வேலை செய்த உடன் ரூ.1,050 பணம் கிடைத்தது. மீண்டும் ரூ.8 ஆயிரம் செலுத்தி வேலை செய்தவுடன் ரூ.14 ஆயிரம் வந்தது. இதை நம்பிய செல்வதாஸ், குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக ரூ.5 லட்சத்து 83 ஆயிரம் வரை செலுத்தி உள்ளார். பின்னர் ஆன்லைன் கணக்கில் பல லட்சம் ரூபாய் லாபம் வந்திருப்பதாகவும், அதை எடுப்பதற்கு ரூ.9 லட்சம் வரை செலுத்தினால் மட்டுமே எடுக்க முடியும் என்று கூறி உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த செல்வதாஸ் தென்காசி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த சதீஷ் பாண்டியன் (30 வயது) மற்றும் இளையராஜா (32 வயது) ஆகிய இருவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவான சிலரை வலைவீசி தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/2-arrested-for-defrauding-youth-of-rs-583-lakh-by-promising-part-time-work-online




