சென்னை, என் மீதான எந்த விமர்சனங்களையும் நான் பொருட்படுத்துவது கிடையாது. நான் யார் என்பது எனக்கும், கடவுளுக்கும் தெரியும். என் நோக்கமெல்லாம் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும், நல்ல படங்களை தரவேண்டும். இதுதான் என் லட்சியம். என்று திவ்யபாரதி தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தும் திவ்யபாரதி மாடலிங் துறையின் மூலம் திரையுலகில் அறிமுகமான திவ்யபாரதி, 'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அறிமுக படத்திலேயே ரசிகர்களை தன்வசப்படுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து 'கிங்ஸ்டன்', 'மதில் மேல் காதல்', 'ஆசை', 'லிங்கம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது 3 புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் திரைப்படங்களைத் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் திவ்யபாரதி, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். குறிப்பாக தனது நீளமான கூந்தல் மற்றும் ஸ்டைலான தோற்றத்தால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பேட்டியில் பேசிய நடிகை திவ்யபாரதி இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகை திவ்யபாரதி, “சினிமா ஆசை இல்லாத நான் எதிர்பாராத விதமாக சினிமாவுக்கு வந்தேன். கிடைக்கும் எல்லா படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம் அல்ல. எனவே தான் வாய்ப்புகள் வாசல் நோக்கி வரும் போது, உடனடியாக ஓகே சொல்வதில்லை. என் மீதான எந்த விமர்சனங்களையும் நான் பொருட்படுத்துவது கிடையாது. நான் யார் என்பது எனக்கும், கடவுளுக்கும் தெரியும். என் நோக்கமெல்லாம் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும், நல்ல படங்களை தரவேண்டும். இதுதான் என் லட்சியம். இடையில் வரும் விமர்சனங்கள் தேவையில்லாதது”. என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-do-not-pay-heed-to-criticisms-about-me-divyabharathi




