கொழும்பு, சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்க தயாராகி வருகிறது.முதல் டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி காலேவில் தொடங்குகிறது. இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா, சாய் சுதர்சன் காயம் காரணமாக முழுத் தொடரிலிருந்தும் விலகியுள்ளனர். ஹர்ஷித் ராணா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் காயம் காரணமாக தொடரில் இடம்பெறவில்லை. வாஷிங்டன் சுந்தர் தொடக்க டெஸ்டில் விளையாடமாட்டார் என ஏற்னவே தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது 2வது டெஸ்டில் சுந்தர் விளையாடுவதும் சந்தேகமாகியுள்ளது. அவரது உடல்தகுதி குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது தொடை தசையில் ஏற்பட்ட காயத்திலிருந்து வாஷிங்டன் சுந்தர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இதனால் 2வது டெஸ்ட் போட்டிக்குள் அவர் அணியுடன் இணைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர் என்பதால், அவர் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/test-against-sri-lanka-setback-for-team-india-key-player-likely-to-withdraw




