தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனம் மதுபானங்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 11-ந் தேதி உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, அந்த நிறுவனத்தின் குறிப்பிட்ட மதுபான தயாரிப்புகளில் செயற்கை சுவையூட்டும் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களின் விற்பனையை நிறுத்துமாறு தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. தடை நீக்கம் அதன்படி வி.எஸ்.ஓ.பி. எக்ஸ்ஷா கோல்டு பிராந்தி, லூயிஸ் வெர்னான்ட் எக்ஸ்ஓ பிளெண்டட் பிரீமியம் பிராந்தி, மெக்டொவெல்ஸ் வி.எஸ்.ஓ.பி. பிராந்தி, நம்பர் ஒன் மெக்டொவெல்ஸ் பைன் பிராந்தி, மென்'ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி, ஹனி பீ பைன் பிராந்தி, என்ரிகா வி.எஸ்.ஓ.பி. செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் எக்ஸ்ஓ பிராந்தி, என்ரிகா பிரீமியம் பிரெஞ்ச் பிராந்தி, வீரன் ஸ்பெஷல் பிராந்தி, என்ரிகா ஒல்டு இண்டி கிளா சிக் டார்க் ரம் ஆகியவை தடை செய்யப்பட்டன. இந்த நிலையில் மறுநாளே தடை நீக்கப்பட்டுள்ளது. உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு தடையை நீக்கலாம் என பரிந்துரையை செய்ததையடுத்து தடை நீக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/ban-lifted-on-11-types-of-liquor-at-tasmac-shops




