திண்டுக்கல், மோஹித் ஹரிஹரனின் அதிரடி சதத்தின் உதவியால் மதுரைக்கு 241 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். டிஎன்பிஎல் 10-வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. 19-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வரும் 19-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸை வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 240 ரன்கள் குவிப்பு தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 240 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மோஹித் ஹரிஹரன் அபாரமாக விளையாடி 50 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். நாராயண் ஜெகதீசன் 48 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். ஸ்வப்னில் சிங் 21 பந்துகளில் 42 ரன்கள் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 241 ரன்கள் இலக்கு இதையடுத்து மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற 20 ஓவர்களில் 241 ரன்கள் எடுக்க வேண்டும். மிகப்பெரிய இலக்கை நோக்கி மதுரை பாந்தர்ஸ் அணி தற்போது களமிறங்க உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-mohit-hariharans-explosive-century-chepauk-sets-a-target-of-241-runs-for-madurai




