இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் 'முகமூடி', 'பீஸ்ட்', 'ஜனநாயகன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளன. அவர் கூறியதாவது:- "பொதுவாக எல்லோருக்கும் ஒரு தேடல் இருக்கும். ஆனால் எனக்கு வாழ்க்கையில் எந்த தேடலும் கிடையாது. வாழ்க்கையை அதன்போக்கில் வாழ்ந்து வருகிறேன். நான் திட்டமிட்டு செய்தது பெரியளவில் வெற்றிகரமாக அமையவில்லை. ஆனால் செய்துதான் பார்ப்போமே. என்று தொட்ட விஷயங்கள் அனைத்துமே எனக்கு கைகொடுத்திருக்கிறது. இதனாலேயே நான் திட்டமிடுவதை கைவிட்டுவிட்டேன். கதை கேட்கும்போது கூட, சரி அல்லது இல்லை என்று ஏதாவது ஒரு முடிவை உடனடியாக சொல்லிவிடுவேன். ஆனாலும் இந்தப் போக்கை ரசிக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/vaazhkkaiyil-enakku-entha-thedalum-kidayathu-nadigai-pooja-hegde




