ராய்ப்பூர் சத்தீஷ்காரில் முன்னாள் பெண் நக்சலைட்டுகள் ரேம்ப் வாக் செய்து அசத்தினர். சத்தீஷ்காரின் பஸ்தார் மாவட்டத்தின் வன பகுதியில் பல ஆண்டுகளாக துப்பாக்கிகளுடனும், குண்டு சத்தத்துடனும் நக்சலைட்டுகள் வாழ்ந்து வந்தனர். அவர்களில் பலர் ஆயுதங்களை விடுத்து, போலீசில் சரண் அடைந்து பொது வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பெண் நக்சலைட்டுகள் இந்நிலையில், தேசிய கைத்தறி தினம் கடந்த 7-ந்தேதி கொண்டாடப்பட்டது. அப்போது ராய்ப்பூர் நகரில் உள்ள தீனதயாள் உள்ளரங்கில் முன்னாள் பெண் நக்சலைட்டுகள் ரேம்ப் வாக் செய்து கவனம் ஈர்த்தனர். அவர்கள் பஸ்தார் மாவட்டத்தின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து கொண்டு நடந்து சென்றனர். கோசா பட்டாடைகளையும் அணிந்திருந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் உடனடியாக வைரலாகின. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/chhattisgarh-former-women-naxalites-ramp-walk




