சென்னை, சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று திறந்து வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கம், ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளம் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவால் இன்று (13.08.2026) திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு தேசிய, பன்னாட்டு தரத்திற்கு இணையான பயிற்சி வசதிகள் கிடைக்கப்பெறும் வகையில் இந்த தடகள ஓடுதளம், செயற்கை இழை ஓடுதளமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் நோக்கில், செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் ராமநாதபுரம், சேலம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.38 கோடியே 24 லட்சம் மதிப்பில் புதிய செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, நீலகிரி, ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. கடந்த 3 மாத காலங்களில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை, அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, விருதுநகர், விழுப்புரம், கடலூர், தருமபுரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தடகள எறிதல் மையம், செயற்கை இழை ஹாக்கி மைதானங்கள், பாரா விளையாட்டரங்கங்கள், முதல்-அமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளம் ஆகியவை ரூ.31 கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-8-crore-worth-renovated-synthetic-fiber-athletic-track-minister-athav-arjuna-inaugurates




