ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினாவிற்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது ஸ்பெயின். நியூயார்க் நியூ ஜெர்ஸி மைதானத்தில் நடந்த போட்டியானது முதல் பாதி வரை எந்த கோல்களும் இல்லாமல் முடிந்தது. போட்டி தொடங்கிய 5 ஆவது நிமிடத்தில் டேனி ஆல்மோ செய்த பாஸ்சில் லமின் யமால் பந்தை கோலுக்கு உதைத்தார். ஆனால் அதை கோல் கீப்பர் லாவகமாக தடுத்துவிட்டார். 17 ஆவது நிமிடத்தில் லமின் யமால் செய்த 2 ஆவது கோல் முயற்சியில் மீண்டும் பந்து கோல் கீப்பரிடம் வசமாக சிக்கியது. 39 ஆவது நிமிடத்தில் டேனி ஆல்மோ செய்த பாஸ்சில் ஓயர்சபலின் வசம் வந்தது பந்து, அவரும் கோல் போடும் வாய்ப்பை தவறவிட்டார். தொடர்ந்து 43 ஆவது நிமிடத்தில் குகுரேல்லா அடித்த ஒரு முக்கியமான "லாங் ஷாட்டும்" கோல் போஸ்ட்டைத் தாண்டிச் சென்று ஸ்பெயினுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. மெஸ்ஸி இதைத் தொடர்ந்து, இரண்டாம் பாதியில் 57 ஆவது நிமிடத்தில் ஓல்மோவுக்கு கோல் போடும் வாய்ப்பு கைக்கூடியது. ஆனால் அதை அர்ஜென்டினா வீரர் மான்டியல் தடுத்தார். லமின் யமாலின் வசம் பந்து எப்போதெல்லாம் இருக்கிறதோ அப்போதெல்லாம் அர்ஜென்டினா வீரர்கள் சிறப்பாக தடுப்பாட்டம் செய்து பந்தை தங்கள் வசப்படுத்தினர்.மேலும் 77 ஆவது நிமிடத்தில் "பேக் டூ பேக்" ஸ்பெயின் கோல் போட உதைத்த பந்தை அர்ஜென்டினாவின் கோல் கீப்பர் "எமிலியானோ மார்டினஸ்" மிகச்சிறப்பாக செயல்பட்டு தடுத்தார். 10 வீரர்களாக குறைந்த அர்ஜென்டினா அணி: இரண்டாம் பாதியில் 0-0 என்ற சமநிலை நிலவிய நிலையில் மேலும் 30 நிமிடங்கள் எக்ஸ்ட்ரா டைம் வழங்கப்பட்டது. 90+3 நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் நிக்கோ வில்லியம்ஸ் அடித்த லாங் ஷாட்டை அர்ஜென்டினா கோல் கீப்பர் தடுத்தார். ஸ்பெயின் வீரர் குபார்ஸியை ஃபவுல் செய்ததால் ஆட்டத்தில் இரண்டு முறை எல்லோ கார்டை பெற்ற என்சோ பெர்னாண்டஸ் "ரெட் கார்டு" வழங்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார். இது அர்ஜென்டினாவின் வீரர்களை 11-லிருந்து 10 ஆக குறைத்தது.இது அணியை மேலும் பின்னடைவில் சிக்க வைத்தது. ஸ்பெயினை வெற்றியின் பக்கம் திருப்பிய எக்ஸ்ட்ரா டைம்: 90+6 நிமிடத்தில் நிக்கோ வில்லியம்ஸ் அடித்த கோல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினாலும், அர்ஜென்டினா வீரர் மெரினோவை ஃபவுல் செய்ததன் காரணமாக அந்த கோல் நிராகரிக்கப்பட்டது. 100 நிமிடத்திற்கு மேல் ஆன போது ஸ்பெயின் அதிகப்படியாக 20 கோல் முயற்சிகளை செய்திருந்தனர். ஆனால் அதுவரை அர்ஜென்டினா ஒரு கோல் முயற்சிகள் கூட செய்திருக்கவில்லை. மொரட்டு சம்பவம் இங்குதான் நிகழ்ந்தது, 106 ஆவது நிமிடத்தில் நிக்கோ வில்லியம்ஸ் பந்தை கோலுக்கு வழிவகுத்தார் அதை "பெர்ரன் டோரஸ்" கோலாக மாற்றி ஸ்பெயின் அணிக்கு தனது முதல் கோலைப் பெற்றுத்தந்தார்(1-0). தொடர்ந்து 114 ஆவது நிமிடத்தில் இவர் அடித்த இரண்டாவது கோல் ஆப்சைடு என்பதால் அது நிராகரிக்கப்பட்டது. இறுதியாக 120+5 நிமிட ஆட்டத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்தி 2010-க்கு பிறகு இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது ஸ்பெயின். மேலும் 2010 உலகக்கோப்பையில் இது போன்ற எக்ஸ்ட்ரா டைமில் தான் நெதர்லாந்து அணியை (1-0) என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2026 உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியின் கேப்டனிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஃபிஃபா-வின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ இருவரும் இணைந்து உலகக்கோப்பையை வழங்கினர். மேலும் இரண்டாவது முறையாக 22 கோல்களுடன் இந்த உலகக்கோப்பையில் 10 கோல்கள் அடித்து மற்றும் 4 அசிஸ்டுகள் செய்து கோல்டன் பூட்டை வென்று உலக சாதனை படைத்தார் எம்பாப்பே. இவர் 2022 உலகக்கோப்பையில் முதல் கோல்டன் பூட்டை வென்றது குறிப்பிடத்தக்கது. 2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு விருது வென்றவர்கள்: கோல்டன் பால் - ரோட்ரி(ஸ்பெயின்) கோல்டன் க்ளோவ் - உனாய் சிமோன்(ஸ்பெயின்) சிறந்த இளம் வீரர் - பாவ் குபார்சி (ஸ்பெயின்). முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://sports.vikatan.com/football/spain-outlasts-argentina-1-0-in-extra-time-to-win-second-world-cup-title




