சென்னை, ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற அபய் சிங்கிற்கு முதல்-அமைச்சர் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- வாழ்த்து ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர் அபய் சிங்கிற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். ஸ்குவாஷ் வீரர் அபய் சிங் அவர்களின் இவ்வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். அவர் எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/abhay-singh-wins-silver-in-asian-games-chief-minister-announces-rs-50-lakh-incentive




