நியூயார்க், ஏ.ஐ. தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறி வேகமாக வளர்கிறது. இது ஒட்டு மொத்த மனிதகுலத்துக்கும் ஆபத்து என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆந்த்ரோபிக் நிறு வனம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது. ஆபத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் பயன் பாடு சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து ஐ.நா. பாது காப்பு கவுன்சிலில் முக்கிய விவாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிளாட்டின் ஆந்த்ரோ பிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடெய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஏ.ஐ. தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதும், ஏ.ஐ. அமைப்புகளின் திறன் அதன் உருவாக்குபவர்களின் (மனிதர்கள்) கட்டுப்பாட்டை மீறி வேகமாக வளர்வதும் என முக்கிய மான இரண்டு ஆபத்துகள் உள்ளன. குறிப்பாக, ஏ.ஐ.யை உயிரியல் ஆயுதங்களை உரு வாக்குவதற்கும் தவறாகப் பயன்படுத்தக்கூடும். ஏ.ஐ. தொழில்நுட்பம் சரியாக கையாளப்படா விட்டால், அது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஏ.ஐ. நிறுவனங் கள் வெளியிடும் ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏ.ஐ.யால் ஏற்படும் ஆபத்துகளை சமாளிப்பது ஒரு நிறுவனத்தால் மட்டும் முடியாது. உலக நாடுகள் மற்றும் ஏ.ஐ. நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சர்வதேச ஒத்துழைப்பு ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறுகையில், ஏ.ஐ. மனிதர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளையும் படைப்பாற்றலையும் வழங்கும் தொழில்நுட்பமாக மாறலாம். அதே நேரத்தில், அது மிகப்பெரிய குழப்பத்தையும் மாற்றங்களையும் ஏற்படுத்தும் தொழில் நுட்பமாகவும் மாறக்கூடும். ஏ.ஐ. தொடர்பான மிக முக்கியமான முடிவுகளை ஒரு சில தொழில்நுட்ப நிறுவனங்கள் அல்லது ஒரு நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் மட்டும் எடுக்கக் கூடாது ஏ.ஐ. வளர்ச்சி குறித்து உலக நாடுகள் இணைந்து முடிவுகளை எடுக்க வேண்டும். மேலும், ஒன்றுக்கொன்று போட்டியிடும் நாடுகள் கூட சக்தி வாய்ந்த புதிய தொழில்நுட்பத் தால் ஏற்படும் பொதுவான சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்பட்ட நிகழ்வுகள் வரலாற்றில் உள்ளன. சர்வதேச ஒத்துழைப்பு தேவை ஏ.ஐ. விவகாரத்திலும் இதுபோன்ற சர்வதேச ஒத்துழைப்பு தேவை என்றார். இந்த கூட்டத்தில் லைபீரியா உள்ளிட்ட நாடுகள், ஏ.ஐ. தொடர்பான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தின. ஏ.ஐ.யின் வளர்ச்சிக்கு ஏற்ப அதன் பயன்பாட்டுக்கான பாதுகாப்பு விதிகளும் சர்வதேச ஒத்துழைப்பும் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் கூட்டத்தில் முன்வைக்கப் பட்டது. முக்கியமாக, இந்தக் கூட்டத்தில் ஏ.ஐ. நிறுவனங்களின் தலைவர்களே அதன் வளர்ச் சியால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பாதுகாப்பு கவுன்சிலில் நேரடியாக எச்சரித்திருப் பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/openai-anthropic-ceos-call-for-global-ai-regulation-at-un



