சென்னை,. தமிழக சட்டசபையில் பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. அப்போது நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆதரவு தெரிவித்தனர். அமைச்சர் விஸ்வநாதன் நீட் தேர்வு விலக்கு தீர்மானம் தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் பேசிக் கொண்டிருந்தபோது தி.மு.க. எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்; அதன் எதிர்வினையாக த.வெ.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ஆவேசமாக முழக்கமிட்டனர். அப்போது குறுக்கீட்ட சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் "ஒழுங்கீனமாக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் நின்றால் நடவடிக்கை எடுப்பேன்" என தி.மு.க. மற்றும் த.வெ.க. எம்.எல்.ஏக்களை எச்சரித்தார். ராகுல் காந்தி தொடர்ந்து அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில், நீட் எதிர்ப்பு போராட்டக்களத்தில் ராகுல் காந்தி நிற்கிறார் என புகழ்ந்து பேசினார். மீண்டும் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. தி.மு.க. எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று ஆவேசமாக பேசியதை அடுத்து (என்ன அவரோடு அமைச்சர்) சண்டைக்கு வர்றீங்களா என்று கேட்டு சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அமரச் சொன்னார். இதனையடுத்து அனைவரும் அவர்களது இருக்கையில் அமர்ந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-stir-caused-by-minister-viswanathans-remarks-and-the-immediate-words-spoken-by-the-speaker




