சென்னை, "அம்மாவிடம் வாரத்திற்கு ஒருமுறையாவது திட்டு வாங்குவேன். ஏதாவது பிரச்சினை பண்ணி திட்டு வாங்கிருவேன். ஆனால் அப்பாவை பொறுத்தவரை மாதத்திற்கு ஒருமுறைதான் கோவம் வரும். ஆனால் கோபம் வந்தது என்றால் அவ்வளவுதான்." என ‘சிக்மா’ பட நிகழ்ச்சியில் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் பரியா அப்துல்லா ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கேத்ரின் தெரசா ஒரு துள்ளலான பாடலில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுகிறார். இந்த படம் வருகிற 2ந் தேதி (நாளை) தியேட்டர்களில் வெளியாக உள்ளது. படத்திற்கான புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஜேசன் சஞ்சய் ஈடுபட்டுள்ளார். விஜய் மகன் இயக்கும் முதல் படம் என்பதால் அவரது ரசிகர்களும் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஜேசன் சஞ்சய் பேட்டி அந்த வகையில், பேட்டி ஒன்று அளித்த ஜேசன் சஞ்சய், தனது தந்தை குறித்து பேசியது வைரலாகி வருகிறது. ஜேசன் சஞ்சய் கூறியதாவது: அம்மாவிடம் வாரத்திற்கு ஒருமுறையாவது திட்டு வாங்குவேன். ஏதாவது பிரச்சினை பண்ணி திட்டு வாங்கிருவேன். ஆனால் அப்பாவை பொறுத்தவரை மாதத்திற்கு ஒருமுறைதான் கோவம் வரும். ஆனால் கோபம் வந்தது என்றால் அவ்வளவுதான். தந்தை என்றால் அப்படித்தான் இருப்பார்கள். அதை நாம் மதிக்க வேண்டும். எல்லோரையும் போல நானும் சின்ன வயசில் பொய் சொல்வேன்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/if-dad-gets-angry-thats-it-jason-sanjay-speaks-about-his-father-vijay




