விசாகப்பட்டினம், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சதமடித்து அசத்தினார். கோலி 88 பந்துகளில் 139 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதில் 10 பவுண்டரியும், 9 சிக்சரும் அடங்கும். கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி எளிதில் வெற்றிபெற்றது. இதன் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதன் விபரம்; * விராட் கோலி இந்த ஆட்டத்தில் 61 ரன் எடுத்த போது. சர்வதேச ஒரு நாள் போட்டியில் 15 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த மைல் கல்லை எட்டிய 2-வது வீரர் ஆவார். * ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (ஒரு நாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் சேர்ந்து) கோலியின் சதங்கள் எண்ணிக்கை 86-வது உயர்ந்துள்ளது. இந்த வகையில் அதிக சதங்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கருக்கு (100 சதங்கள்) அடுத்த இடத்தில் உள்ளார். * ஒரு நாள் கிரிக்கெட்டில், ஒரு நாட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராக இதுவரை சச்சின் தெண்டுல்கர் (இந்திய மண்ணில் 6.976 ரன்) இருந்தார். அவரது இச்சாத னையை கோலி (இந்தியாவில் 7,006 ரன்) நேற்று முறியடித்தார். * ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 10 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அவர் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக தலா 10 சதங்கள் அடித்துள்ளார். வேறு எந்த வீரரும் இச்சாதனையை நிகழ்த்தவில்லை. * நேற்றைய ஆட்டத்தில் கோலி மொத்தமாக 9 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் கோலி அடித்த அதிகபட்ச சிக்சர்கள் இதுவாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/virat-kohli-sets-multiple-records-in-a-single-match




