ரஜினியின் “ஜெயிலர் 2” திரைப்படத்தின் டிரெய்லர் வரும் அக்டோபர் 5ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ரஜினி – நெல்சன் கூட்டணி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்பட்டது. ‘ஜெயிலர் 2’ படத்துக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வரவேற்பை பெற்ற பாடல்கள் இப்படம் ரூ.350 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற அக்டோபர் மாதம் 15-ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இப்படத்திலிருந்து ‘அல்ல போலேலோ’, ‘ஒன் மூன். ஒன் சன்’என்ற பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறன்றன. இசை ஆல்ப வெளியீட்டு அறிவிப்பு ‘ஜெயிலர் 2’ படத்தின் இசை ஆல்பம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வரும் 30 ஆம் தேதி இசையமைப்பாளர் அனிருத் இசைக்கச்சேரி போல் நடத்தி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘டிசி’ திரைப்படத்திற்கு செய்தது போல், குறைவான ரசிகர்களை வைத்து மேடையில் அனைத்து பாடல்களையும் பாட உள்ளனர். ‘ஜெயிலர் 2’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்ஸ் இதனைத் தொடர்ந்து, ‘ஜெயிலர் 2’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்ஸ் எப்போது வெளியாகும் என்ற வீடியோ வெளியாகியுள்ளது. 29/09/2026 - ஒன் நேம்’ பாடல் லிரிக்கல் வீடியோ வெளியீடு 30/09/2026 - 4வது பாடல் வீடியோ வெளியீடு 30/09/2026 - முழு இசை ஆல்பம் வெளியீடு 03/10/2026 - இசை வெளியீட்டு நிகழ்ச்சி சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியீடு 04/10/2026 - இசை வெளியீட்டு நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பு 05/10/2026 - டிரெய்லர் வெளியீடு என அடுத்தத்த நாள்களில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். Ready ah? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/rajinikanths-jailer-2-trailer-and-subsequent-updates



