2018 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி நடிப்பில், பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'பரியேறும் பெருமாள்'. இப்படம் வெளியாகி நேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் இப்படத்தில் ஹீரோவாக நடித்த கதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'பரியேறும் பெருமாள்' குறித்து பகிர்ந்திருக்கிறார். பரியேறும் பெருமாள் அப்பதிவில், "சில பயணங்கள் நம்மை விட்டு என்றென்றுமே பிரிவதில்லை. இந்தப் படம் (பரியேறும் பெருமாள்) இதிலுள்ள மனிதர்கள், நினைவுகள், மற்றும் இந்த உருவாக்கத்தின்போது நாம் கடந்து வந்த அனைத்தும் இன்றும் என் இதயத்தில் ஒரு மிகச் சிறப்புமிக்க இடத்தைப் பிடித்துள்ளன. டோரதி: "ஏற்றத்தாழ்வுகளை அடித்து நொறுக்கும் ஆயுதமாய் நிற்கிறாள்" - படத்தைப் பாராட்டிய இயக்குநர்கள் ஒவ்வொரு ஆண்டும் திரும்பிப் பார்க்கும்போது, அந்தப் பயணம் நம்மை எவ்வளவு தூரம் அழைத்துச் சென்றுள்ளது என்பதையும், எனக்கு எவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்பதையும் எண்ணி நன்றியுணர்வோடு இருக்கிறேன். பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் அண்ணன் பா.ரஞ்சித் அண்ணன், செல்வராஜ்அ ப்பா மற்றும் இந்தப் படத்திற்காகத் தங்கள் வியர்வை, இதயம் மற்றும் ஆன்மாவை அர்ப்பணித்த ஒவ்வொருவருக்கும் எனது அன்பும் நன்றிகளும். 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் அதே சிறப்பான உணர்வைத் தருகிறது" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். Ilaiyaraaja: 'எப்பவும் நான் ராஜா'; கார்த்திக் சுப்புராஜ் டு மாரி செல்வராஜ் - இளையாராஜாவின் லைன் அப் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/kollywood/actor-kathir-about-8-years-of-pariyerum-perumal



