வால்பாறை, கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு, சிங்கோனா ஆகிய எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் ஆண் காட்டு யானை ஒன்று சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அங்குள்ள பலா மரத்தில் இருந்து பழத்தை பறிக்க முயற்சித்தது. ஆனால் எப்படி பறிப்பது என தெரியாமல் சிறிது நேரம் பலா மரத்தின் அடியிலேயே சுற்றி வந்தது. பின்னர் பலா மரத்தை தலையால் முட்டி ஆட்டிப்பார்த்தது. அப்படியாவது மரத்தில் இருந்து பலாப்பழம் கீழே விழும் என்று எதிர்பார்த்தது. ஆனால் பலாப்பழம் கீழே விழவில்லை. இதனால் பொறுமையை இழந்த காட்டு யானை பலா மரத்தின் மீது முன்னங்கால்களை தூக்கி வைத்து துதிக்கையால் எட்டி பலாப்பழத்தை பறித்தது. தொடர்ந்து பசியாற அந்த பழத்தை ருசித்து தின்றது. இறுதியாக அந்த யானையின் ஒரு மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. இதை அந்த பகுதியில் தோட்ட பணியில் இருந்த தொழிலாளர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்டு மெய்சிலிர்த்து போயினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/delicious-struggle-near-valparai-wild-elephant-plucks-jackfruit-from-tree




