கொளத்தூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து இவிஎம் எந்திரங்கள் ஆய்வு செய்யும் பணி கடந்த 29 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு இருந்தார். ஸ்டாலின் தோல்வி இவரை எதிர்த்து தவெக சார்பில் விஎஸ் பாபு களம் இறங்கினார். தேர்தல் ரிசல்டில் மு.க ஸ்டாலினை, விஎஸ் பாபு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த கொளத்தூர் தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த 29 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டது. வழக்கு தொடர முடிவு? மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னிலையில் இவிஎம் இயந்திரங்கள் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ உள்ளிட்டோரும் தவெக சார்பில் விஎஸ் பாபுவின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்று இருந்தனர். ஒரு நாளைக்கு 2 வாக்குச்சாவடிகள் வீதம் மொத்தம் 14 வாக்குச்சாவடிகளுக்கு 7 நாட்களாக இந்த வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று 4-வது நாளாக வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது. இந்நிலையில் திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என கூறியுள்ளார். மேலும் ஆய்வு செய்த 8 எந்திரங்களில் 3 எந்திரங்கள் சரியாக இல்லை. இது தொடர்பாக மு.க ஸ்டாலினின் அறிவுறைப்படி நீதிமன்றத்தை நாடுவோம்” என்று கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-evidence-that-the-election-in-the-kolathur-constituency-was-not-conducted-properly-dmk




