சென்னை, "அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்" படத்தின் சாதனையை முறியடித்து, இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஹாலிவுட் படத்தின் மிகப்பெரிய முதல் நாள் வசூல் என்ற புதிய மைல்கல்லை "ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே" எட்டியுள்ளது. கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. இதில் டாம் ஹாலண்டு கதாநாயகனாகவும், ஜெண்டயாa கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' திரைப்படத்திற்குப் பிறகு சுமார் ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் அமோக வரவேற்பு ஸ்பைடர்மேன் திரைப்பட வரிசையில் நான்காவது படமாக வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தை காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு சென்று வருகின்றனர். புதிய எதிரிகள், விறுவிறுப்பான அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளால் உலகம் முழுவதும் இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' சாதனை முறியடிப்பு இந்த நிலையில், வெளியாகிய முதல் நாளிலேயே 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் இந்தியாவில் சுமார் ரூ.72.44 கோடி மொத்த வசூலைக் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன்மூலம், இதுவரை இந்தியாவில் ஹாலிவுட் திரைப்படங்களில் அதிக முதல் நாள் வசூல் என்ற சாதனையை வைத்திருந்த 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. புதிய மைல்கல் முதல் நாளிலேயே இந்திய வசூலில் புதிய உச்சத்தை எட்டியுள்ள 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே', இந்திய திரையரங்கு வரலாற்றில் ஹாலிவுட் திரைப்படங்களின் முதல் நாள் வசூலில் புதிய மைல்கல்லை படைத்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/spider-man-brand-new-day-breaks-avengers-endgame-record




