சென்னை, வார விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த மக்கள், விடுமுறை முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று மாலை முதல் சென்னை நோக்கி திரும்பினர். இதன் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது திருச்சி, பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கார்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் மெதுவாகச் சென்றன. குறிப்பாக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அதிக அளவில் குவிந்தன. பரனூர் டோல்கேட் அருகே நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஜிஎஸ்டி சலையிலும் இன்று பிற்பகலில் இருந்தே சென்னை நோக்கி வரும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இரவு நேரத்திலும் சென்னை நோக்கி வாகனங்களின் வரத்து தொடர்ந்து அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/people-returning-to-chennai-after-the-weekend-traffic-congestion-on-gst-road




