Volledig artikel
மத்திய அமைச்சரவையில் மாற்றம்? சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஜார்ஜ் குரியன். இவரிடம் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறைகளின் கூடுதல் பொறுப்பும் இருந்து வந்தது. அவருடைய ராஜ்ய சபா பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஜார்ஜ் குரியன். ஆனால், இவரை மீண்டும் ராஜ்ய சபா பதவிக்கு பரிந்துரைக்கவில்லை பாஜக. பிரதமர் மோடி - குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மேலும், இன்னொரு மத்திய இணையமைச்சரான ரவ்னீத் சிங் பிட்டுவின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், இவரது அமைச்சர் பதவியும் காலியாகிறது. இதையடுத்து, மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்கிற பேச்சுகள் அடிப்படுகின்றன. நேற்று இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்ததும் இந்தப் பேச்சுகளை இன்னும் வலுவாக்குகிறது. மேலும், பாஜக 'ஒருவருக்கு ஒரு பதவி' என்கிற கொள்கையை முன்னெடுத்தாலும், பலருக்கும் அமைச்சர் பதவி பறிப்போகும். இதனால், அமைச்சரவையில் பல புதிய முகங்கள் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இன்று கூடுகிறது சென்னை மாநகராட்சி கூட்டம்! மூன்று மாதங்களுக்குப் பிறகு, இன்று (ஜூன் 24, 2026) சென்னை மாநகராட்சி கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க சென்னை மாநகராட்சி எல்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி விஜய்-க்கு பெ.சண்முகம் பதிலடி நேற்று (ஜூன் 23, 2026) தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், "தாங்கள் யார் தயவிலும் ஆட்சி அமைக்கவில்லை" என்று பேசியிருந்தார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், "நாங்கள் ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால், முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழாவே நடந்திருக்காது" என்று பேசியுள்ளார். விஜய் - பெ.சண்முகம் தமிழக அரசியல், இந்திய அரசியல் பற்றிய இன்றைய முக்கிய செய்திகளை இந்த Live Blog-ல் ஃபாலோ செய்யுங்க மக்களே! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel — zie link hieronder



