சென்னை, கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படம், வரும் செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. கால்பந்து பின்னணியில் உருவான படம் மலையாளத்தில் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆனபரம்பிலே வேர்ல்டு கப்’. நிகில் பிரேம்ராஜ் இயக்கிய இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், பாலு வர்கீஸ், சாய்ஜு குருப் மற்றும் முன்னாள் கால்பந்து வீரர் ஐ.எம். விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்களின் கால்பந்து மீதான ஆர்வத்தையும், அந்த விளையாட்டைச் சுற்றி நடைபெறும் சம்பவங்களையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருந்தார். திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் ‘7 ஸ்டார் பாய்ஸ்’ இந்த நிலையில், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஆனபரம்பிலே வேர்ல்டு கப்’ திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் (ரீமேக்) செய்யப்பட்டு ‘7 ஸ்டார் பாய்ஸ்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. பீனிக்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. அசோக் இப்படத்தை தமிழில் வெளியிடுகிறார். கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படம், வரும் செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் ரசிகர்களிடையே இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்போர்ட்ஸ் டிராமா படம். தயாரிப்பாளர் டி. அசோக் இது குறித்து தயாரிப்பாளர் டி. அசோக் கூறுமையில், “ ‘7 ஸ்டார் பாய்ஸ்’ புட்பால் சம்பந்தமான ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம். இதில் கால்பந்து விளையாட வேண்டும் என தீராத ஆர்வம் கொண்ட 12 வயதிற்கு உட்பட்ட சிறார்கள், உள்ளூரில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளின்போது மைதானத்தில் அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் திறமையான விளையாடும் ஆண்டனி வர்கீஸை தங்களுடைய ரோல் மாடல் நாயகனாக கருதுகிறார்கள். அதன் பின்னணியில் கதை நடக்கிறது” என்றார். டிரெய்லர் வெளியானது இந்த நிலையில், இப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ‘7 ஸ்டார் பாய்ஸ்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து வெளியான இந்த டிரெய்லர் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/trailer-of-the-movie-7-star-boys-released




