மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த நிஷா என்ற பெண் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் தனது தோழி ஒருவருடன் தங்கி இருந்தார். அப்பெண் அமராவதியைச் சேர்ந்த 34 வயது வாலிபரைக் கடந்த பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். அந்த வாலிபர் புனேயில் பி.எச்.டி படித்துக்கொண்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வாலிபர் தனது நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு நிஷாவின் தாயாரைச் சந்தித்துப் பேசினார். நிஷாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். நிஷாவின் தாயாரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் அந்த வாலிபரின் பெற்றோர் இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து அந்த வாலிபர் நிஷாவிடம் தெரிவிக்காமல் தொடர்ந்து உறவைத் தொடர்ந்து வந்தார். ஒவ்வொரு முறையும் நிஷா திருமணம் குறித்து பேசும்போது எதாவது காரணத்தைச் சொல்லி தட்டிக்கழித்து வந்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடியாது என்று அந்த வாலிபர் நிஷாவிடம் தெரிவித்துவிட்டார். சம்பவத்தன்று அப்பெண் தனது காதலனுக்கு வீடியோ கால் செய்து பேசிக்கொண்டிருந்தார். திருமணம் செய்யும்படி கேட்டார். ஆனால் அந்த வாலிபர் திருமணம் செய்ய முடியாது என்று தெரிவித்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று நிஷா தெரிவித்தார். ஆனால் அதனைத் தடுத்து நிறுத்த அந்த வாலிபர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நிஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்த பிறகும் 23 நிமிடம் தொடர்ந்து வீடியோ கால் ஓடிக்கொண்டிருந்தது. நிஷா திருமணம் செய்யும்படி நிர்ப்பந்தம் செய்ததால் தன்னிடம் இருக்கும் ஆட்சேபகரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டு விடுவேன் என்று அந்த வாலிபர் மிரட்டியதாகவும், இதனால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும், வீடியோ காலில் இருந்தபோதும் தற்கொலையைத் தடுத்து நிறுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நிஷாவின் பெற்றோர் போலீஸில் தெரிவித்துள்ளனர். அவர்களின் புகாரைத் தொடர்ந்து நிஷாவின் காதலனைக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை: போக்சோ வழக்கில் சிக்கிய போலீஸ் எஸ்.ஐ கொலை - ஆண் நண்பருடன் மனைவி சிக்கிய `அதிர்ச்சி' பின்னணி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/crime/woman-commits-suicide-by-hanging-while-on-video-call-with-her-boyfriend




