கர்னூல், அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ். என்ற திருக்குறள் வரிகளுக்கு ஏற்ப, தாயை இழந்து தவித்த நாய் குட்டிகளுக்கு பன்றி ஒன்று தாயுள்ளத்தோடு பாலூட்டி வரும் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. விபத்தில் இறந்த நாய் தாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பன்றி பால் ஊட்டிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் இறந்த நாய் ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் கோசிகியை அடுத்த ஜாம்பாபுரத்தில் பெண் நாய் ஒன்று 4 குட்டிகளை ஈன்றிருந்தது. ஆனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பெண் நாய் விபத்து ஒன்றில் இறந்துவிட்டது. குட்டிகளின் பசி இதனால், பிறந்த சில நாட்களேயான அந்த நாய் குட்டிகள் தாய்ப்பால் கிடைக்காமலும், பசியால் என்ன செய்வது என்று தெரியாமலும் தவித்து வந்தன. குட்டிகளின் பசி அழுகுரல் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. பாச போராட்டம் இந்த நிலையில் தான் அந்த பகுதியில் ஆச்சரியமான ஒரு பாச போராட்டம் நிகழ்ந்தது. அந்த பகுதியில் சுற்றி திரியும் பெண் பன்றி ஒன்று, பசியால் அழுதுகொண்டிருந்த நாய் குட்டிகளின் சத்தத்தை கேட்டு அந்த இடத்திற்கு வந்தது. பசிக்கொடுமை தாய் இறந்துபோனது கூட தெரியாமல், அந்த குட்டி நாய்கள் பசியால் வாடின. பசிக்கொடுமையை வாய்விட்டு கத்தி வெளிப்படுத்தின. இதை உணர்ந்துகொண்ட பெண் பன்றி ஒன்று, அந்த குட்டி நாய்கள் அருகே வந்து படுத்துக்கொண்டது. பால் ஊட்டிய பன்றி பசியால் துடித்துபோன நாய் குட்டிகளும் பன்றியை பார்த்து பயப்படாமல், அருகே சென்று பால் குடித்தன. பசி ஆறிய பிறகே அங்கிருந்து திரும்பி சென்றன. நாய் குட்டிகளுக்கு பன்றி ஒன்று பால் ஊட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/can-love-ever-be-confined-a-sow-nursed-puppies-that-had-lost-their-mother




