திருப்பத்தூர், திருப்பத்தூர் அருகே பேராம்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன். இவரின் மகன் அஜய் (24 வயது), கார் டிரைவர். இவரும், ஜெயப்பிரியா என்பவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 மாதமே ஆன ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், விரக்தி அடைந்த ஜெயப்பிரியா வீட்டின் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த அஜய் தனது மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். இருவரும் கிணற்றில் குதித்து தத்தளிப்பதை பார்த்த அவர்களின் உறவினரான அஜித் என்பவர் இருவரையும் காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளார். அப்போது அஜித்தால் ஜெயப்பிரியாவை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மேலும் அஜய் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் அங்கு சென்று இறந்த அஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-jumps-into-well-over-family-dispute-husband-dies-trying-to-save-her




