சிறு சிறு தீவுக்கூட்டங்களை மிகுதியாக கொண்ட நாடுகளுள் ஒன்று நார்வே. அங்கு 2 லட்சத்துக்கும் அதிகமான தீவுகள் காணப்படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை மிகச் சிறியவை. மனிதர்கள் வசிக்காதவை. போட்டன், வெஸ்டெராலன் உள்ளிட்ட முக்கியத் தீவு களில் மட்டுமே மக்கள் நிரந்தரமாக வசிக்கின்றனர். நகர வாழ்க்கையின் பரபரப்பில் இருந்து விலகி, இங்குள்ள தீவுகளில் நீங்கள் ஒரு தனித்துவமான அமைதியையும், மன நிம்மதியையும் உணர முடியும். படகு போக்குவரத்து முக்கிய தீவுகளை சென்றடைவதற்கும், சுற்றுலா ரீதியிலான பயன்பாட்டு தீவுகளை சுற்றிப் பார்ப்பதற்கும் படகு போக்குவரத்தே பிரதானமாக இருக்கிறது. ஆரம்பத்தில் படகுகளை இயக்குவதற்கு டீசல் என்ஜின்களே பிரதானமாக இருந்தன. ஆனால் இப்போது மின் பயன் பாட்டில் இயங்கும் வண்ணம் படகு போக்குவரத்து மாற்றம் கண்டு வருகிறது. ஈரான் போர் ஈரான் போர் காரணமாக எரிபொருள் பிரச்சினை உலகெங்கும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் நார்வே தொலைநோக்கு பார்வையுடன் ஏற்கனவே மின்சாரத்தில் இயங்கும் படகு போக்குவரத்தை நோக்கி நகர்ந்து விட்டது. எனினும் அறவே டீசல் என்ஜின் படகுகள் நிறுத் தப்படவில்லை. மின்சார பயன்பாடு அவசர காலங்கள், கடுமையான குளிர்காலங்களில் மின்சார பயன்பாடு செயலிழக்கும்போது பயன்படுத்துவதற்கு ஏதுவாக டீசல் இயந்திரங்கள் அல்லது பயோடீசல் ஜெனரேட்டர்களை பயன்படுத்துவது சட்டப்படி நடைமுறையில் இருக்கிறது. ஹைட்ரஜன் போன்ற மாசு உமிழ் வற்ற மாற்று வழிகளையும் ஆராய்ந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/ferry-traffic-is-the-main-way-to-reach-the-islands-near-norway




