சென்னை, டி.என். 07 சி.எம். 2031 என்ற எண் கொண்ட கார் திருமாவளவன் பயன்படுத்தியது சினிமா படபிடிப்பு வாடகை கார் என விடுதலை சிறுத்தை கட்சி விளக்கம் அளித்துள்ளது. சென்னை, செப். 22-விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டி.என். 07 சி.எம். 2031 என்ற பதிவு எண் கொண்ட காரில் செல்வது போன்ற புகைப் படம் சமூக வலைதளத்தில் வைரலானது கோட் சூட்டுடன் திருமா வளவன் அந்த காரில் வித்தியாசமான தோற்றத் தில் காட்சி அளித்தது அரசிய களத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் பொரு ளாளர் எஸ்.எஸ்.பாலாஜி வெளியிட்டுள்ள விளக் அறிக்கையில் கூறிருப்பதாவது;- ஒரு தனியார் நிறுவனத்தின சமூக சார்பில் "திருமா 35 நீதியின் சகாப்தம்" என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. பூந்தமல்லி ஈ.வி.பி. 5 பிலிம் சிட்டி யில் நடந்த படப்பிடிப்பின் ஒரு பகுதியாக கூரை திறக்கப்பட்ட வாகனத்தில் திருமாவளவன் வரும்போது எடுக்கப்பட்டது அந்த படம். அந்த படம். படப்பிடிப்பு தளத்தில் படம் பிடிக்கப்பட்ட அந்த வாகன எண் குறித்து வன்மத்தை நெஞ்சில் நிறுத்தி மலிவு அரசியல் மனநிலையோடு காழ்ப்புணர்ச்சியை.கக்குகின்றனர். அவரை வைத்து படம் பிடிக்கப்பட்ட அந்த விலை உயர்ந்த கார் படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விடப்படுவதாகும். ஆளும் கட்சியாக வி.சி.க." என்கிற எதிர்கால திசைப்புள்ளியை வெளிப்படுத்த படப்பிடிப்பு குழுவினர் டி.என்.07 சி.எம். 2031 என வாகன எண் வடிவமைத்து இருந்தனர். படப்பிடிப்பில் இடம் பெறும் காட்சிகள் பயன்படுத்திய காரின் ரகம். அதனுடைய எண் ஆகியவை குறித்து திருமாவளவனுக்கு தெரியாது. நிகழ்ச்சி நடத்திய குழுவே அதனை இறுதி செய்தது. இதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் புலம்புகின்றனர். திருமாவளவன் சி.எம். என பதித்த காரில் தாங்கிக் கொள்ள முடியாமல் வழக்கம்போல் அவதூறு பரப்புகின்றனர். இன்று தீர்மாணித்தது போல் நாளைய தமிழகத்தின் அரசியல் திசை வழியை மக்கள் தீர்மானிக்கும் அதை உளப்பூர்வமாக உள்வாங்குவது தான் திருமாவளவன். காலத்தின் தீர்ப்பை பெரு மகிழ்ச்சியோடு வரவேற்று சிறுத்தைகள் காத்திருப்போமே தவிர எரிச்சலோடு வெறுப்பு அரசியலில் வெந்து போபவர்கள் அல்ல. எனவே தமிழின மேம்பாட்டின் மீதும் சமூக நீதியின் மீதும் அக்கறை கொண்டுள்ள அனைவரும் இத்தகைய கொடும் சிந்தனையாளர் களை கண்டிப்போம். இவ்வாறு அதில் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/thirumavalavan-used-a-rented-car-for-a-movie-shoot-visikas-explanation




