மேட்டூர், மூன்று மாதங்களுக்கு பிறகு 80 அடியை எட்டியது மேட்டூர் அணை. காவிரி கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது. இதையடுத்து கடந்த 1-ந் தேதியில் இருந்து கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்டது. அதே நேரம் கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்தும் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வீதம் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று 80 அடியை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 80.31 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது வினாடிக்கு 7,833 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 80 அடியை கடந்துள்ளதால், மேட்டூர் அணையை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/mettur-dam-water-level-reaches-80-feet-after-three-months




