ரஜினியின் ‘தர்மன்’ படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஆக்சன் கதைக்களம் நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. மருத்துவராக ரஜினிகாந்த் இதில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில், சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும், இந்த படத்துக்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு ‘தர்மன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்த்து. 3-ம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம் இந்நிலையில், ‘தர்மன்’ படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியதாக அறிவித்துள்ள இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்துடன் ராஷி கன்னா நடிக்கும் காட்சியை படமாக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/rajinikanths-dharman-film-3rd-schedule-shooting-begins




