90-களில் பாலிவுட் சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர், கஜோல். இவர் தமிழில் 'மின்சார கனவு', 'வேலையில்லா பட்டதாரி 2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 51 வயதிலும் அழகு குறையாமல் வலம் வரும் கஜோல், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளன. அவர் கூறும்போது, "உங்கள் சுயமதிப்பை மற்றவர்களிடம் எதிர்பார்க்காமல், உங்களது மனதுக்குள் நீங்களே தேடிக்கொள்ள வேண்டும். பிறர் நம்மை மதிப்பார்கள் என்று ஏங்குவது நம் நிம்மதியைக் கெடுக்கும். உங்கள் மதிப்பு மற்றவர்களின் பாராட்டைப் பொறுத்தது அல்ல. வெளி உலகத்திடம் மதிப்பு தேடும்போது ஏமாற்றமே மிஞ்சும். உங்களை நீங்களே முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். கஜோலின் இந்தக் கருத்துக்கு வரவேற்பு குவிகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/veli-ulagathidam-mathippu-thedumpothu-aemaatrame-minjum-kajol-arivurai




