நியூயார்க், உலகக் கோப்பை தோல்வியால் துவண்டு காணப்பட்ட மெஸ்சிக்கு ஆறுதல் கூறிய லமின் யமாலின் செயல் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. ஸ்பெயின் சாம்பியன் 23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி, 2-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்தது. கட்டியணைத்து ஆறுதல் தோல்வியால் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி மைதானத்தில் துவண்டு காணப்பட்டார். அப்போது ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திர வீரர் லமின் யமால், மெஸ்சியிடம் சென்று அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். இந்த நெகிழ்ச்சியான தருணம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. லமின் யமாலின் இந்த செயலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/football/messi-shaken-by-defeat-lamine-yamal-offers-consolation-viral-video




