தாராபுரம் தாராபுரத்தில் முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில் பொதுமக்களின் தாகம் தணிப்பதற்காக விசேஷ லாரி நிறுத்தப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சத்தியபாமா, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தார். இதனால் அந்த தொகுதிக்கு வருகிற 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லெட்சுமணன் உள்பட 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. முதல்-அமைச்சர் பிரசாரம் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால், பிரதான கட்சி வேட்பாளர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவு கேட்டு அந்த கட்சியின் தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய் இன்று தாராபுரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இதற்காக தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் கொண்டரசம்பாளையம் மாருதி நகரில் 54 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக மைதானம் தயார் செய்யப்பட்டு பணி நிறைவடைந்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் விஜய் ஆதரவு திரட்டுகிறார். இதற்காக முதல்-அமைச்சர் நின்று பேச இருக்கும் பேருந்து, மேடை அமையும் இடத்தின் அருகே நிறுத்தப்படுகிறது. 10 ஆயிரம் பேருக்கு அனுமதி பொதுக்கூட்ட அரங்கில் முதலில் அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து பொதுமக்கள், தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்ட பந்தலில் 10-க்கும் மேற்பட்ட பிரமாண்ட எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 10 ஆயிரம் பேருக்கு 'கியூஆர்' கோடுடன் கூடிய சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதல்-அமைச்சர் விஜய் புறப்பட்டு மதியம் 1 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைப்பகுதிக்கு மதியம் 3 மணிக்கு வருகிறார். இரும்பு தடுப்புகள் முதல்-அமைச்சர் காரில் வருவதால், தாராபுரம்-பல்லடம் இடையேயான நான்கு வழிச்சாலையின் இருபுறமும் பள்ளி, கல்லூரி, கிராம பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட 50 இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டு வருகிறது. இதேபோல் முக்கிய இடங்களில் சாலையோரம் இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் தாராபுரம் மாநகருக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசி முடித்ததும் முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து கார் மூலம் கோவைக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றடைகிறார். 3 ஆயிரம் போலீசார் முதல்-அமைச்சரின் வருகையையொட்டி தாராபுரம் நகரம் மற்றும் பொதுக்கூட்டம் நடக்கும் மாருதிநகர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னேற்பாடுகளை நேற்று கோவை போலீஸ் டி.ஐ.ஜி. சாமிநாதன் ஆய்வு செய்தார். கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ரம்யாபாரதி தலைமையில் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் வசதிகள் முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், கூட்டம் நடக்கும் இடத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் தேவைக்காக குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பல குழாய்கள் மற்றும் தண்ணீர் குவளைகள் பொருத்தப்பட்ட விசேஷ தண்ணீர் லாரி ஒன்று கூட்டம் நடைபெறும் திடலில் நிறுத்தப்பட்டுள்ளது. வெயிலின் பாதிப்பை எதிர்கொள்ளவும், கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கவும் த.வெ.க. சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-campaign-thirst-relief-lorry




