வாஷிங்டன், ஹாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஹேடன் பேனட்டியர். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடந்த ஜனவரி மாதம் இவர் நடித்த ‘ஸ்லீப்வாக்கர்’ என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில், நடிகை ஹேடன் பேனட்டியர் உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். அவருக்கு வயது 36. நடிகை ஹேடனின் தீடீர் மறைவு அவரது ரசிகர்களை சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. நடிகை ஹேடனுக்கு திருமணம் ஆகவில்லை. இருப்பினும் அவருக்கு பாக்சிங் வீரர் விளாடிமிர் கிளிட்ச்கோ என்பவருடன் திருமணம் நிச்சயமாகி இருந்தது. திருமணத்திற்கு முன்பே 2014-ல் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளாலேயே 2018-ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான ‘ஸ்கிரீம்’(Scream) வரிசை திரைப்படங்கள் நடிகை ஹேடன் பேனட்டியர் நடித்துள்ளார். இது தவிர ‘ரிமெம்பர் தி டைட்டன்’, ‘ஐஸ் பிரின்சஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், ‘ஹீரோஸ்’, ‘நேஷ்வில்’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கடந்த மே மாதம் நடிகை ஹேடன், ‘திஸ் இஸ் மீ: ஏ ரெக்கனிங்’(This Is Me: A Reckoning) என்ற தலைப்பில் தனது சுயசரிதை நூலை வெளியிட்டார். அந்த புத்தகத்தில் பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு, போதைக்கு அடிமையானது மற்றும் அதில் இருந்து மீண்டது, குடும்ப வன்முறை மற்றும் இழப்பு ஆகியவை குறித்து மனம் திறந்து பல தகவல்களை ஹேடன் பகிர்ந்திருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு ஹேடனின் சகோதரர் ஜான(வயது 28) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இழப்பில் இருந்து தன்னால் மீண்டு வரவே முடியாது என்று நடிகை ஹேடன் வேதனை தெரிவித்திருந்தார். கடந்த சில மாதங்களாக நடிகை ஹேடன் மிகுந்த மனச்சோர்வுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது தீடீர் மரணத்திற்கான காரணம் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. நடிகை ஹேடன் வரும் 21-ந்தேதி தனது 37-வது பிறந்தநாளை கொண்டாட இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/famous-hollywood-actress-dies-suddenly-at-a-young-age-fans-shocked




