நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. தற்போது திரைப்படம் திரைக்குவரத் தயாராகி வருகிறது. அதைத் தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்திற்கு தர்மன் எனப் பெயரிட்டுள்ளனர். ஆக்ஷன் கலந்த கதையாக உருவாகிவரும் இப்படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார். இது, படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார். View this post on Instagram அதேப் போல கன்னட திரையுலகம் மூலம் நடிகையாக அறிமுகமான கயாடு லோஹர், தற்போது, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் நடிகை கயாடு லோஹரும் விமானத்தில் சந்தித்துக்கொண்டனர். இது தொடர்பாக நடிகை கயாடு லோஹர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``நான் இன்னும் கனவுதான் கண்டு கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அவருடைய மிகப் பெரிய ரசிகராக இருந்து, எதிர்பாராத விதமாக ஒரு விமானத்தில் ரஜினிகாந்த் சாருக்கு தொட்டுச் சூடும் தூரத்தில், பக்கத்து சீட்டிலேயே அமரும் வாய்ப்பு கிடைத்தது. இதை என்னால் இன்னமும் நம்பவே முடியவில்லை. அவரைப் பார்த்த அந்த நொடியில், என் மனதிற்குள் 'சுந்தரி' பாட்டு ஓட ஆரம்பித்துவிட்டது; அப்படியே மாய உலகத்திற்குள் சென்றுவிட்டேன். எவ்வளவு ஒரு நம்பமுடியாத, எதிர்பாராதத் தருணம். என் நாளே இனிமையாகிவிட்டது. என்றாவது ஒரு நாள் அவருடன் சேர்ந்து திரையைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். அவருக்கு அருகில் நான் உருளைக்கிழங்குப் போல் இருக்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதயம் முரளி: "தமிழில் நான் முதல் முறையாக ஒப்பந்தமான படம்தான்!" - கயாடு லோஹர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://cinema.vikatan.com/kollywood/actress-kayadu-lohar-has-shared-a-heartwarming-post-about-meeting-actor-rajinikanth-on-a-flight




