Volledig artikel
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உணவு அருந்தி வருகின்றனர். பள்ளி ஆசிரியர்களுக்கும், காலை உணவு திட்டத்தில் பணிபுரியும் மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி காலையில் பற்றாக்குறை காரணமாக சில குழந்தைகளுக்கு உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. துவக்கப்பள்ளி மாணவர்கள் இதனால் உணவு கிடைக்காத குழந்தைகள் பசியுடன் இருக்கக்கூடாது என பள்ளி ஆசிரியர்கள் பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரித்தபோது, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் மூலம் சுமார் 267 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் கணக்கர், சமையலர், உதவியாளர் என 3 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த கல்வியாண்டில் பள்ளி தொடங்கப்பட்ட நாள் முதல் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த 10 மாணவர்களுக்கு காலை உணவு பற்றாக்குறையால் வழங்கப்படவில்லை. நாளுக்கு நாள் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், காலை உணவு சாப்பிட வரும் மாணவர்கள் எண்ணிக்கை இன்னும் தெளிவாக தெரியவில்லை. பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகள், பள்ளிக்கு வராமல் இருப்பதற்காக அடம் பிடிப்பது வழக்கம். அவர்களை பெற்றோர் பள்ளிக்கு அழைத்து வருவதிலும் தாமதம் ஏற்படும். காலை 8.50 மணிக்குள் காலை உணவு வழங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை துறை சார்ந்த செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால், காலதாமதமாக வரும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க முடியாத நிலை உள்ளது, என தெரியவந்தது. இதற்கிடையே, பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு கிடைக்காத தகவல் வெளியே பரவியது. விளாத்திக்குளம் இதையடுத்து மாவட்ட அலுவலர் (பொறுப்பு) செல்வி தலைமையிலான அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதே போல், முதல்வரின் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளரான ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அலுவலர்களும் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இரு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களும் தங்களது விசாரணை அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க உள்ளனர். அதன் பின்னர் நடவடிக்கைகள் குறித்து தெரியவரும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel — zie link hieronder



