டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடிற்கு எதிராக நடைபெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியை 15 வயதுடைய சிறுமி அவதூறாகப் பேசியதாக அந்தச் சிறுமி மீது நொய்டாவில் ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அந்தச் சிறுமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்புக் கோரி வீடியோ வெளியிட்டிருக்கிறார். மோடியிடம் மன்னிப்பு கேட்ட சிறுமி வீடியோவில் பேசியிருக்கும் அந்தச் சிறுமி, "நான் நண்பர்களுடன் கன்னாட் பிளேஸ் பகுதியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டபோது, பிரதமருக்கு எதிராக அவதூறான முழக்கங்களை எழுப்பினேன். என்னைச் சுற்றியிருந்தவர்களின் தாக்கத்தால் நான் அவ்வாறு பேசிவிட்டேன். எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்தது மன்னிக்க முடியாத செயல். நான் பல மோசமான வார்த்தைகளைப் பேசிவிட்டேன். இதுதான் நான் செய்யும் முதல் மற்றும் கடைசி தவறு. நான் ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்புக் கேட்கிறேன். நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னால் என்னையே பார்க்க முடியவில்லை. தயவுசெய்து என்னை மன்னியுங்கள்" என்று பேசியிருக்கிறார். CJP: ``ரீல்ஸில் மட்டும்தான் பிரதமர் மன்னிப்பாரா?" - போராட்ட வழக்குகள் குறித்து அபிஜித் தீப்கே கேள்வி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/15-year-old-girl-apologizes-after-fir-over-remarks-against-pm-modi




