தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி அருகே யானை தாக்கி விவசாயி பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள தொட்ட மஞ்சி ஊராட்சிக்குட்பட்ட ஒன்னேபுரம் மலை கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா (வயது 59), விவசாயி. இவருடைய மனைவி காலம்மாள். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். யானை நேற்று காலை முனியப்பா மாடுகளை மேய்ச்சலுக்காக மஞ்சி காப்புக்காடு எப்பெல்லா வனப்பகுதிக்கு ஓட்டி சென்றார். அப்போது வனப்பகுதியில் புதரில் மறைந்து இருந்த யானை, திடீரென விவசாயி முனியப்பாவை விரட்டி சென்று தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை வனப்பகுதியில் ஆடு, மாடுகள் மேய்க்க சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் அஞ்செட்டி வனத்துறைக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை இதையடுத்து வனச்சரகர் அருண்குமார் மற்றும் வனத்துறையினர், போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் முனியப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/farmer-killed-in-elephant-attack-near-anchetty




